தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஜெகதீசன் - சந்தோஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் பாபா அபாரஜித் 24 ரன்களிலும், சித்தார்த் 17 ரன்களுக்கும், அபிஷேக் தன்வர் 3 ரன்களுக்கும், சதிஷ் 9 ரன்களுக்கும், ஃபெராரிரோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெகதீசன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களை எடுத்து அணிக்கு உதவினார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நேல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு அருண் கார்த்திக் - மொகித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அருண் கார்த்திக் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹரிஹரனுடன் இணைந்த அஜிதேஷ் குருஸ்வாமி அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின்னர் குருஸ்வாமி 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அருன் குமாரும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஹரிஹரனும் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய நிதீஷ் ராஜகோபால் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய சோனு யாதவ், ரித்திக் ஈஸ்வரன், கிருபாகர் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜகோபால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 53 ரன்களைச் சேர்த்து அணிகு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News