டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய ராஜ்குமார்; தொடர் தோல்வியில் கோவை கிங்ஸ்!

Updated: Tue, Jun 17 2025 23:36 IST
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய ராஜ்குமார்; தொடர் தோல்வியில் கோவை கிங்ஸ்!
Image Source: Google

சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்து இந்த தொடரில் தொடர்ச்சியக நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது. 

டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுஜய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் வசீம் 32 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கௌஷிக் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சுஜயும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 27 ரன்களிலும், ஜாஃப்ர் ஜமால் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ராஜ் குமார் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. கோவை கிங்ஸ் தரப்பில் சுப்ரமணியம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மீண்டும் சோபிக்க தவறினர். அதன்படி அணியின் ஜித்தேந்திர குமார் 7 ரன்னிலும், சுரேஷ் லோகேஷ்வர் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 2 ரன்களுடன் நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த பாலசுப்ரமனியம் சச்சின் - ஆண்ட்ரே சித்தார்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் சிறப்பாக விளையடியதுடன் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Also Read: LIVE Cricket Score

பின் சச்சின் 38 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் 39 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்புகளையும் தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் மாதவ பிரசாத் 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. திருச்சி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளையும், ராஜ்குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை