ஸ்பின்னர்களை பாராட்டிய டாம் லேதம்!

Updated: Sat, Apr 02 2022 22:43 IST
Image Source: Google

நெதர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றது. டி20 போட்டி மழை காரணமாக  டாஸ் கூட போடாத நிலையில் போட்டி நடக்கவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி களமிரங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதமின் பொறுப்பான ஆட்டத்தின் காரணமாக50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக லாதம் 140 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 

இந்நிலையில் போட்டியின் வெற்றிகுறித்து பேசிய டாம் லேதம், “தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு வருவது சரியான சூழ்நிலையாக இல்லை. ஆனால், அதுதான் கிரிக்கெட், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். நாங்கள் சில பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி 50 ஓவர்கள் முடியும் வரை பேட் செய்தோம். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இன்னிங்ஸை காப்பாற்றினர்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை