ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்!

Updated: Wed, Apr 27 2022 15:57 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒருசிலர் கரோனாவால் பாதிக்கப்பட்டபோதிலும், தனிமைப்படுத்துதால், பயோ பபுள் ஆகியவை மிகக்கடுமையாக பின்பற்றப்படுவதால் போட்டிகள் நடத்தப்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் கொரோனா காரணமாக டெல்லி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டிக்கு கிரவுண்டுக்கு வரவில்லை பாண்டிங். டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஹோட்டல் அறையில் தனிமையில் இருந்தார்.

டெல்லி - ராஜஸ்தான் போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்திலும் சிக்ஸர் விளாசி ரோவ்மன் பவல் பரபரப்பை கிளப்ப, அந்த ஓவரின் 3வது பந்தை மெக்காய் நோ பாலாக வீசினார். ஆனால் அம்பயர் அதற்கு நோ பால் கொடுக்காததால் பெரும் சர்ச்சை வெடித்தது. டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். கேப்டன் ரிஷப் பண்ட், வீரர்களை களத்தை விட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுத்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியினர் இவ்வளவு உணர்ச்சிவசமாக அந்த விஷயத்தை அணுகியதற்கு காரணம், ரோவ்மன் பவல் தொடர்ந்து  3 சிக்ஸர்களை விளாசி வெற்றிநம்பிக்கையை விதைத்ததுதான். ஒருவேளை அதற்கு நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதனால்தான், டெல்லி அணியினர் ஓவர் ரியாக்ட் செய்தார்கள்.

ரிஷப் பண்ட், பிரவீன் ஆம்ரேவே இப்படி ரியாக்ட் செய்தார்கள் என்றால், ரிக்கி பாண்டிங் களத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆனால் அவர் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், அவரால் அந்த போட்டிக்கு நேரில் வரமுடியவில்லை.

ஆனால் டிவியில் அந்த காட்சிகளை பார்த்தபோது செம கடுப்பாகி டிவி ரிமோட்களையும், தண்ணீர் பாட்டில்களையும் சுவரில் எறிந்து உடைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், “நான் செம வெறுப்பில் இருந்தேன். 3-4 டிவி ரிமோட்களை உடைத்துவிட்டேன். தண்ணீர் பாட்டில்களை சுவரில் எறிந்து உடைத்தேன். ஒருபயிற்சியாளராக களத்தில் இதுமாதிரியான விஷ்யங்கள் நடக்கும்போது கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் கடினம். ஆனால் மைதானத்தில் இல்லாமல் வெளியே இருப்பது இன்னும் வெறுப்பான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை