ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய டாப் 5 பேட்டர்கள்!

Updated: Tue, Sep 03 2024 12:40 IST
Image Source: Google

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிப்பது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மேலும் இந்த வடிவத்தில் உலகின் பல்வேறு கிரிக்கெட் அணிகளின் ஜாம்பவான்களும் சாதனைகளை குவித்துள்ளனது. இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த முதல் 5 பேட்ஸ்மேன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

டான் பிராட்மேன்

ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் தன் வசம் வைத்துள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 37 டெஸ்ட் போட்டிகளில் 63 இன்னிங்ஸ்களில் விளையாடி 5,028 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவர் 19 சதங்களை விளாசியுள்ளார். அதேசமயம் டான் பிராட்மேட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்களை அடித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 இன்னிங்ஸ்களில் 2,749 ரன்கள் எடுத்தார். அதில் அவர் 13 சதங்கள் அடித்தார். அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் 34 சதங்களை அடித்துள்ளார்., 

ஸ்டீவ் ஸ்மித்

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் தற்போதைய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தும் இடம்பிடித்துள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,417 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 12 சதங்களையும் விளாசியுள்ளார். அதேசமயம் சர்வதேச அளவில் ஸ்டீவ் ஸ்மித் இதுநாள் வரை 32 அரைசதங்களை அடித்துள்ளார். 

ஜாக் ஹாப்ஸ்

இந்த பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடிப்பவர் முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாக் ஹோப்ஸ். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 இன்னிங்ஸில் 3,636 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் 12 சதங்களை அடித்துள்ளார். அதேசமயம் சர்வதேச அளவில் அவர் மொத்தமாகவே 15 சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்

Also Read: Funding To Save Test Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை தன்வசம் வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த பட்டியலில் ஐந்தாவது இடமே கிடைத்துள்ளது. இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 39 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,630 ரன்களை சச்சின் எடுத்துள்ளார், அதில் அவர் 11 சதங்களை அடித்துள்ளார். அதேசமயம் சர்வதேச அளவில் 51 சதங்கள் அடித்ததுடன், அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை