டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் டிரென்ட் போல்ட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் சிறப்பு மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் அவர் டி20 கிரிக்கெட்டில் தனது 300 விக்கெட்டுகளை நிறைவு செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டும் 3ஆவது நியூசிலாந்து வீரர் எனும் பெருமையை பெறுவார்.
முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் டிம் சௌதீ 343 டி20 போட்டிகளில் 285 இன்னிங்ஸில் விளையாடி 343 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேசயம் நியூசிலாந்தின் இஷ் சோதி 288 போட்டிகளில் 278 இன்னிங்ஸில் விளையாடி 310 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், டிம் சௌதீ 256 போட்டிகளில் 254 இன்னிங்ஸ்களில் விளையாடி 299 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனில் இதுவரை, மும்பை அணியின் மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளர் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது, அவர் 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் போல்ட் 16ஆவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 114 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, யுத்விர் சிங்.
Also Read: LIVE Cricket Score
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.