செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Aug 30 2021 13:40 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
  •     இடம் - வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  •     நேரம் - இரவும் 7.30 மணி

போட்டி முன்னொட்டம்

நேற்று நடைபெற்ற சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளும் நாளை மீண்டும் மொதவுள்ளன. ஏற்கெனவே நைட் ரைடர்ஸ் அணி, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேசமயம் மோசமான தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றுள்ள செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, தனது வெற்றிப்பாதையை தொடர கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

உத்தேச அணி

செயிண்ட் லூசியா கிங்ஸ்: ராகீம் கார்ன்வால், ஆண்ட்ரே பிளெட்சர், ஃபாஃப் டு ப்ளெஸிஸ், மார்க் டீயல், ரோஸ்டன் சேஸ், டிம் டேவிட், கீமோ பால், உஸ்மான் காதிர், ஓபேத் மெக்காய், அல்சாரி ஜோசப், ஜெவொர் ராயல்.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: லெண்ட்ல் சிம்மன்ஸ், சுனில் நரைன், காலின் முன்ரோ, டிம் செய்ஃபெர்ட், டியன் வெப்ஸ்டர், தினேஷ் ராம்டின், கீரன் பொல்லார்ட் (கே), இசுரு உதானா, அகில் ஹொசைன், ரவி ராம்பால், ஜெய்டன் சீல்ஸ்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - ஆண்ட்ரே பிளெட்சர், டிம் சீஃபர்ட்
  •     பேட்ஸ்மேன்கள் - டிம் டேவிட், ஃபாஃப் டு பிளெசிஸ், காலின் முன்ரோ
  •     ஆல் -ரவுண்டர்கள் - ரகீம் கார்வால், இசுரு உதானா, சுனில் நரைன், கீரன் பொல்லார்ட்
  •     பந்துவீச்சாளர்கள் - ஓபெட் மெக்காய், ஜெய்டன் சீல்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை