உலகெங்கும் டி20 தொடர்கள் பெரிய வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் வெஸ்ட் இண்டிஸில் 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்தத் தொடர் ரவுண்டு ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இந்த வருடமும் நேற்று முன்தினம் இந்த தொடர் ஆரம்பித்து உள்ளது.

Advertisement

நேற்று நடந்த போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும், பார்படோஸ் ராயல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கான டாசில் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜான்ஸ்சன் சார்லஸ் 30, ஃபாஃப் டு பிளிசிஸ் 46 ரன்கள் என வலிமையான தொடக்கம் தந்தார்கள். ஜிம்பாப்வே நாட்டின் ஜோடியான சீன் வில்லியம்ஸ் 47, சிக்கந்தர் ராசா 23 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 38 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement

அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு துவக்கம் தருவதற்கு ரஹீம் கார்ன்வால், கைய்ல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினார்கள். வீசப்பட்ட ஆட்டத்தின் முதல் பந்திலேயே பரிதாபமான நிகழ்வு நடந்தது. முதல் பந்தை எதிர்கொண்ட ரஹீம் கார்ன்வால் பின்புறமாக லெஃக் சைடு பந்தை தட்ட, அங்கு நின்றிருந்த பீல்டரின் கையில் பந்து பட்டு நழுவியது, இந்த நேரத்தில் மேயர்ஸ் ரன்னுக்கு அழைக்க, கார்ன்வால் கிரீசை விட்டு வெளியே வந்து விட்டார். 

மேயர்ஸ் எதிர்முனைக்கு நகர்ந்து விட்டார். ஆனால் கார்ன்வால் உடல் பருமனால் தொடர்ச்சியாக வேகமாக வந்து ரன்னை முடிக்க முடியவில்லை. அவர் ஆரம்பத்திலேயே விக்கெட்டை விட்டுக் கொடுத்து விட்டார். பொறுமையாக அங்கிருந்து பந்தை கையில் எடுத்து ஸ்டம்ப் நோக்கி ஃபீல்டர் அடிக்க, அவர் பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். பொதுவாக அவரை இப்படியான கடினமான சிங்கிள் ரன்னுக்கு கூப்பிட மாட்டார்கள். அவருடைய வேலை பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் அடிப்பது மட்டுமே. ஆனால் நேற்று அவசரப்பட்டு ஆட்டம் இழந்து விட்டார்.

பார்படோஸ் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து எடுக்க முடிந்த ரன்கள் 147 மட்டுமே. எனவே மிக எளிதாக செயின்ட் லூசியா கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ரஹீம் கார்வால் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News