இவர தூக்கிட்டு இந்த பையனுக்கு சான்ஸ் கொடுங்க - சீனியர் வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் ட்ரெண்ட்பிரிட்ஜில் ஆகஸ்ட் 4ஆம் தொதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிஇந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 183 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி போட்டியின் முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், விக்கெட் எதுவும் இழக்காமல் 21 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே பொறுமையாக விளையாடிய ரோஹித் சர்மா 107 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த போது தேவை இல்லாத ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து வந்த புஜாரா 4 ரன்னிலும், கேப்டன் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயேயும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
இதன்பின் வந்த ரஹானேவும் 5 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வரும் கே.எல் ராகுல் 148 பந்துகளில் 57 ரன்கள் குவித்துள்ளதன் மூலம், போட்டியின் 46 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்துள்ள இந்திய அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா, இந்த போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புஜாரா இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் அவரது இடம் சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் யாருக்காவது கொடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.