WTC final: மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரசிகர்கள்!

Updated: Wed, Jun 23 2021 10:43 IST
Image Source: Google

இந்தியா  - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது மைதானத்திலிருந்து ரசிகர்கள் சில நியூசிலாந்து அணி வீரர்களை வசைபாடுவதை போல் நடந்து கொண்டதாக் ஐசிசிக்கு ட்விட்டர் வாயிலாக புகர் வந்துள்ளது. 

இதையடுத்து விசாரித்த ஐசிசி பாதுகாப்பு அமைச்சகம், இக்குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக இரண்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு 4 ஆயிரன் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை