வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.
Advertisement
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை 127 ரன்னில் சுருண்டது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், 5ஆம் இடத்தையும் தக்கவைத்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் சதம் (135 ரன்) மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார.