ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஏப்ரல் மாதத்திற்கான விருதை வென்றனர் முகமது வசீன் & சோலே ட்ரையான்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்காட்லாந்தின் பிராண்டன் மெக்முல்லன், அமெரிக்க அணியின் மிலிந்த் குமார் மற்றும் வங்கதேச டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு அமீரக அணி கேப்டன் முகமது வசீம் அகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை யுஏஇ அணியின் முகமது வசீம் வென்றுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் முகமது வசீம் பேட்டிங்கில் இரண்டு அரைசதங்களுடன் 145 ரன்களைச் சேர்த்ததுடன், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். இதுதவிர்த்து கடந்த மாதம் முகமது வசீம் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 169 ரன்களையும் எடுத்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் அபார அட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் சோலே ட்ரையான் ஆகியோரும், மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சோலே ட்ரையான் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். கடந்த மே மாதத்தில் சோலே ட்ரையான் மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், பேட்டிங்கில் 58.66 என்ற சராசரியுடன் 176 ரன்களையும், பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.