PSL 2023: சிக்சர்களால் மிரட்டிய உமர் அக்மல்; இஸ்லாமாபாத்திற்கு 180 டார்கெட்!

Updated: Sun, Mar 05 2023 21:20 IST
Umar Akmal and Najibullah Zadran have given Quetta Gladiators a massive recovery! (Image Source: Google)

பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. 

ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யாஷிர் கான், வில் ஸ்மீட், சர்ஃப்ரஸ் அகமது ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய முகமது நவாஸ் அதிரடியாக விளையாட, மறுபக்கம் நட்சத்திர வீரர் இஃப்திகார் அகமது 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து நவாஸுடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஸத்ரானும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

பின் 44 பந்துகளில் 52 ரன்களைச் சேர்த்திருந்த நவாஸ் விக்கெட்டை இழக்க, 34 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்களை எடுத்திருந்த நஜிபுல்லா ஸத்ரானும் ஆட்டமிழந்தார். இறுதியில் உம்ரான் அக்மல அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணிதரப்பில் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை