தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்த்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறதா இந்திய அணி?

Updated: Sun, May 15 2022 14:09 IST
Umran Malik Prasidh Krishna Prithvi Shaw 3 Young Indians Players Who Might Get Chance Against South (Image Source: Google)

ஐபிஎல் 2022 தொடர் மே 29ஆம் தேதி முடிவடைந்த பிறகு ஜூன் 9 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிறது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ,கே.எல்.ராகுல் ,பும்ரா ,ரிஷாப் பந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கடும் களைப்பில் இருப்பார்கள், மேலும் பயோ பபுள் என்ற ஒரு கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதென்பது மன உளைச்சலுக்கான தருணமாகும்.

இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா ,அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார் என்பதால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது .

அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் உம்ரான் மாலிக், மொஹ்சீன் கான், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கும் வாய்ப்பு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உத்தேச அணி :   ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ஷிகர் தவான், ருதுராக் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் அய்யர், ராகுல் திவாத்தியா, உம்ரன் மாலிக், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வெந்திர சஹால், குல்தீப் யாதவ், குருணால் பாண்டியா, ஷாபாஸ் அகமத், தீபக் ஹூடா, மோசின் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை