ஐபிஎல் 2022: வேகத்தில் புதிய உச்சம் தொட்ட உம்ரான் மாலிக்!

Updated: Thu, May 05 2022 22:32 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கிலும், உம்ரான் மாலிக், யஷ் தயால் உள்ளிட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கிலும் அசத்துகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் வேகத்தில் மிரட்டுகிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசுகிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அதை அசால்ட்டாக செய்கிறார் உம்ரான் மாலிக்.

இந்த சீசனில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உம்ரான் மாலிக், டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் இந்த சீசனின் அதிகபட்ச வேகமான பந்தை வீசியுள்ளார். ரோவ்மன் பாவலுக்கு 157 கிமீ வேகத்தில்  வீசினார் உம்ரான் மாலிக். இதுதான் இந்த சீசனின் அதிகபட்ச வேகமான பந்து.

இதற்கு முன்னதாக சிஎஸ்கேவுக்கு எதிராக 154 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் அதனையும் தாண்டி இன்று 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். 

இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் 157.7 கி.மீ வேகத்தில் பந்துவீசியதே ஐபிஎல் தொடர் வரலாற்றி அதிவேகமாக வீசப்பட்ட பந்துவீச்சாக இருந்தது.

இந்நிலையில் உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசியவர்கள்

  • ஷான் டைட் (ராஜஸ்தான் ராயலஸ்) - 157.7 கிமீ
  • உம்ரான் மாலிக் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 157 கி.மீ
  • ஆண்ட்ரிச் நோர்ட்ஜே (டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 156.22 கி.மீ
  • உம்ரான் மாலிக் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 155.60 கி.மீ
  • உம்ரான் மாலிக் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 154.80 கி.மீ
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை