பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விளையாடுவது உற்சாகமாகவுள்ளது - ஜோ ரூட்!

Updated: Sun, Jun 05 2022 22:22 IST
Image Source: Google

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்ற புதிய பயணத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்த முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து விளையாடியது.

92 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த தடுமாறியது. பிறகு அந்த அணியால் 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்த அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சிலும் வில்லியம்சன், வில் யங், டாம் லாத்தம், கான்வே உள்ளிட்ட வீரர்கள் சொதப்பினர்.

இருப்பினும் டெரில் மிட்செல் அபாரமாக விளையாடி சதமும், டாம் பிளெண்டல் 96 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொதப்பியதால் நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ் 20 ரன்களும், ஷாக் கிராலி 9 ரன்களும், போப் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களத்தில் சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்டோக்ஸ் 54 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸின் தலைமையின் கீழ் விளையாடுவது உற்சாகமாகவுள்ளதாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜோ ரூட், “நான் ரன் குவித்ததைப் பற்றி நிறைய பேர் பேசுவார்கள், ஆனால் நீங்கள் தோற்றால் அது மகிழ்ச்சியாக இருக்காது. பென் ஸ்டோக்ஸ் தலைமையின் கீழ் நாங்கள் இப்படித் தொடங்குவதற்கு, இது மிகவும் உற்சாகமான நேரம். நிச்சயமாக, ஏனெனில் ஒரு கேப்டனாக ராஜினாமா செய்தது மிகவும் கடினமாக இருந்தது. 

ஆனால் நான் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தேன், அது என் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமற்ற விளைவை ஏற்படுத்தத் தொடங்கியது. என்னால் அதை சரிவர சமாளிக்க முடியவில்லை. அது என்னையும் என் குடும்பத்தையும் பாதித்தது.

பென் ஸ்டோக்ஸுக்கு நான தேவைப்படும் நேரமெல்லாம், நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன். ஏனெனில் அவர் எனக்காக இருந்தார். ஏதேனும் வழி இருந்தால், அவருக்காக நான் கொஞ்சம் தோள் கொடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அவர் எனக்கு செய்தது போல் அவருக்கும் செய்வேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை