உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sat, Nov 30 2024 20:33 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகித்துள்ளது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை அணிக்கு எதிரான இந்த அபார வெற்றிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியானது 5ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக 54.17 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி 5ஆம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது 59.26 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இந்த பட்டியளில் இந்திய அணி 61.11 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. அதேசமம் 57.69 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணி 54.55 புள்ளிகளுடன் 4அம் இடத்தில் தொடரும் நிலையில், மூன்றாம் இடத்தில் இருந்த இலங்கை அணி இந்த தோல்வியின் மூலம் இரண்டு இடம் பின் தங்கி 50 புள்ளிகளுடன் 5அம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதற்கடுத்த இடத்தில் இங்கிலாந்து அணி 40.79 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியானது 33.33 புள்ளிகளைப் பெற்று தற்போது 7ஆம் இடத்தில் உள்ள நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 26.67 புள்ளிகளைப் பெற்று 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய வங்கதேச அணி 25 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

Also Read: Funding To Save Test Cricket

தற்போது இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால் இதில் எந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இனி வரும் டெஸ்ட் போட்டிகள் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5அம் தேதி நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை