ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை குறிக்கும் வகையில் ஆச்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, தனது ஷூவில் அனைத்து உயிர்களும் சமம் என்ற மெசேஜுடன் களமிறங்கினார். ஆனால் இதனை பயன்படுத்த கூடாது என்று ஐசிசி அறிவுறுத்தி இருந்தது. 

Advertisement

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது டெஸ்டில் அமைதி புறா ஒன்றை தனது பேட்டில் ஸ்டிக்கராக கவாஜா ஒட்டி பயன்படுத்தி இருந்தார். இதற்கு அவர் ஐசிசி இடம் அனுமதி கேட்க அதற்கு ஐசிசி அனுமதி வழங்கவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ஐசிசி நயவஞ்சகத்துடன் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கண்டனம் தெரிவித்திருந்தார். 

Advertisement

இந்த நிலையில் முதல் டெஸ்டில் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடிய உஸ்மான் கவஜா இரண்டாவது டெஸ்டில் ஷூ வில் வேறு ஒரு மெசேஜை எழுதி டிவிஸ்ட் வைத்திருந்தார். அதில் தன்னுடைய இரண்டு மகள்களின் பெயரையும் உஸ்மான் கவஜா எழுதியிருந்தார். தனது சொந்த மகள் பெயரை எழுதி இருந்ததால் ஐசிசியால் எதுவும் செய்ய முடியவில்லை. 

அதாவது இந்த உலகம் நாளை எனது மகளுக்கும் முக்கியம் அவர்களுக்கு ஏற்ற உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உஸ்மான் கவஜா இவ்வாறு எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. ஐசிசி யின் இந்த நடவடிக்கைக்கு உஸ்மான் கவஜா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஐசிசி இந்த விவகாரத்தில் இரட்டை நிலை எடுத்திருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் உஸ்மான் கவஜாவின் இந்த கருத்துக்கு ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா வீரர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். உஸ்மான் கவஜா செய்தது நல்ல விஷயம் என்றும் அவர்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறி இருந்தார். இந்த நிலையில் தனது ஷூ வில் மகள்களின் பெயரை எழுதி ஐசிசிக்கு உஸ்மான் கவஜா டிவிஸ்ட் கொடுத்து இருக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News