சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச்சுற்று ஆட்டத்தில் ஆந்திரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆந்திர அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய ஆந்திர அணிக்கு ஸ்ரீகர் பரத் - அஸ்வின் ஹெப்பர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்ரீகர் பரத் 4 ரன்னிலும், அஸ்வின் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷைக் ரஷீத் 18 ரன்களுக்கும், அவினேஷ் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ரிக்கி புய் - பிரசாத் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் ரிக்கி புய் 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரசாத் 34 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய சசிகாந்த் 23 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆந்திரா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. உத்தர பிரதேச அணி தரப்பில் கேப்டன் புவ்னேஷ்வர் குமார், விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய உத்தர பிரதேச அணிக்கு ஆர்யன் ஜுயல் - கரண் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த கரண் சர்மா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பினைத் தவிறவிட்டார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆர்யன் ஜுயலும் 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய பிரியம் கார்க் 10 ரன்னிலும், நிதீஷ் ரானா 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் தலா 27 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் உத்தர பிரதேச அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திரா அணியை வீழ்த்தியதுடன் காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News