இந்த வீரர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார் - ரிக்கி பாண்டிங்!

Updated: Thu, Oct 14 2021 13:42 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி பரபரப்பான முறையில் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 ரன்களைச் சேர்த்த வெங்கடேஷ் ஐயர், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் பற்றி பேசிய டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது முதல் 10 ஓவர்களில் பனிப்பொழிவின் காரணமாக பேட்டிங் செய்வது சுலபமாக இருந்தது. எங்கள் அணிக்கு அத்தகைய சூழல் இல்லை. எனவே நாங்கள் இன்னும் அதிகமான ரன்களை எடுத்திருக்க வேண்டும். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடினர். அதிலும் வெங்கடேஷ் ஐயர் என்கிற நல்ல வீரரை கேகேஆர் அணி அறிமுகம் செய்துள்ளது. கொல்கத்தா அணியின் மகத்தான வீரராக அவர் இருப்பார். வருங்காலத்தில் இந்தியாவுக்காகவும் விளையாட வாய்ப்புண்டு” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை