விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அருணாச்சல பிரதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் கெடக் ஈடே, லிச்சா ஜான், பிகி குமார், டெச்சி நெரி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ராஜேந்திர சிங் 30 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 45 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்திக் வர்மா மற்றும் அபினவ் சிங் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர். 

Advertisement

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபினவ் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹர்திக் வர்மா 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபினவ் சிங் 71 ரன்களைச் சேர்த்தார். இதனால் அருணாச்சல பிரதேச அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் கௌசிக் மற்றும் ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய கர்நாடகா அணியில் அபினவ் மனோகர் - கேப்டன் மயங்க் அகர்வால் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் அபினவ் மனோகர் அரைசதம் கடந்த நிலையில் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மயங்க் அகர்வால் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 100 ரன்களையும், அபினவ் மனோகர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 66 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் கர்நாடகா அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் மயங்க் அகர்வாலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News