டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி கர்டிஸ் கேம்பர் சாதனை!
அபுதாபியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதிலும் இப்போட்டியின் 9ஆவது ஓவரை வீசிய அயர்லாந்தின் கர்டிஸ் கேம்பர், ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் அயர்லாந்து வீரர் என்கிற பெருமையை கர்டிஸ் கேம்பர் அடைந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிரெட் லீ-க்கு (2007 ) அடுத்ததாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
சர்வதேச டி20: நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள்
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ரஷித் கான் vs அயர்லாந்து, 2019
மலிங்கா vs நியூசிலாந்து, 2019
கர்டிஸ் கேம்பர் vs நெதர்லாந்து, 2021