SA vs IND: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனையைப் படைத்த ஷமி!

Updated: Wed, Dec 29 2021 10:40 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய பவுலராக மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். 

அதன்படி இந்த போட்டிக்கு முன்னர் வரை ஷமி 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்த அவர் 195 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் மேலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய 11-ஆவது இந்திய பந்துவீச்சாளராக அவர் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளராக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஐந்தாவது இந்திய பவுலர் என்ற பெருமையையும் அவர் இந்த போட்டியின் மூலம் பெற்றுள்ளார்.

இந்த சாதனையில் ஒரு சிறப்பான சம்பவம் யாதெனில் இந்திய பவுலர்களில் முதல் வீரராக குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த 200 விக்கெட்டுக்களை எடுக்க ஷமி 9896 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். இவருக்கு முன்னதாக அஷ்வின் 10248 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை