புர்ஜ் கலீஃபாவில் பிரதிபளித்த இந்திய ஜெர்சி!
டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் வரும் 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகதயராகி வருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு அணியும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜெர்சியை வெளியிட்டு வருகின்றன. இதில் தொடரை நடத்தும் இந்திய அணியும் நேற்றையை தினம் தங்களது உலகக்கோப்பை ஜெர்சியை வெளியிட்டு அசத்தியது.
நேவி புளு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட ஜெர்சிக்கு ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என பெயரிட்டு பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இந்திய அணியின் புதிய ஜெர்சி வண்ண விளக்குகளால் பிரதிபளிக்கப்பட்டது. மேலும் புர்ஜ் கலிஃபாவில் இந்திய அணியின் ஜெர்சி பிரதிபளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.