தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்!

Updated: Tue, Feb 06 2024 22:42 IST
தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்! (Image Source: Google)

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளிலிருந்தும் விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்தொடரில் இனி வரும் போட்டிகளில் விராட் கோலியை எதிர்கொள்ள எங்களது அணி தயாராக உள்ளதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கிரிகெட்டின் தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவரது வருகை இந்திய அணியை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாம் முன்பு கூறியது போல், இந்திய கிரிக்கெட்டின் ஆழமும், இந்தியாவில் உள்ள திறமையும் மகத்தானது. எனவே, நாங்கள் எதிர்க்கும் ஒவ்வொரு எதிரணி வீரரையும் மதிக்கிறோம். விராட் மீண்டும் வந்தால்...அவரது குடும்பத்துடன் எல்லாம் நன்றாக இருக்கும் என நம்புகிறோம்.

அவரை எதிர்கொள்வதற்கான அந்த சவாலை நாங்களும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அவர் ஒரு பெரிய போட்டியாளர். அவரை எனக்கு நன்றாகத் தெரியும், அவருக்கு எதிராக விளையாடுவதை நான் ரசித்துள்ளேஎன். அவருக்கு எதிராக எங்கள் அணி விளையாடுவதை நான் ரசித்தேன். நீங்கள் சிறந்தவற்றுக்கு எதிராக வெற்றி பெற்றால், நீங்கள் அதில் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழவிய இங்கிலாந்து அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் அபுதாபி சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை