ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு தோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், டி20 வீரர், டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி ஆகியவற்றைத் தேர்வுசெய்து விருது வழங்கி வருகிறது.

Advertisement

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் விராட் கோலி 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,795 ரன்கள் குவித்துள்ளார். இதில், 12 அரைசதங்களும், 5 சதங்களையும் விளாசியுள்ளார்.

Advertisement

மேலும், நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய அவர் 765 குவித்து உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசி, இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையையும் முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

இந்நிலையில் தான் விராட் கோலிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருதை 4ஆவது முறையாக விராட் கோலி பெற்றுள்ளார்.  இதற்கு முன்னதாக கடந்த 2012, 2017, 2018 ஆகிய ஆண்டுகளிலும் ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

 

மேலும், கடந்த 2017, 2018ஆம் ஆண்டுகளில் ஆண்டின் சிறந்த வீரர், 2018ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், ஒரு தசாப்தத்தின் சிறந்த வீரர், ஒரு தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரர், ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது என மொத்தம் 10 விருதுகளை விராட் கோலி கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் அதிக ஐசிசி விருதுகளை வென்ற வீரர் எனும் சாதனையும் விராட் கோலிக்கு சொந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

அதேபோல் ஐசிசி 2023 ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதை இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து கைப்பற்றினார். முன்னதாக இவர் ஐசிசி 2023ஆம் அண்டின் டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம்பிடித்ததுடன், இரு அணிகளின் கேப்டனாகவும் தேர்வுசெய்யப்படுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News