டி20 கிரிக்கெட்டில் சாதனை மகுடம் சூடிய விராட் கோலி!

Updated: Mon, Mar 15 2021 15:44 IST
Image Source: twitter

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலி, இஷான் கிஷான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 49 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசி 73 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் விராட் கோலி 73 ரன்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

86 டி20 போட்டிகளில் விளாடியுள்ள விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3 ஆயிரம் ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம், இரண்டாயிரம் ரன்களை முதல் வீரராக நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் கடந்திருந்தார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 99 போட்டிகளில் 2,839 ரன்களுடனும், ரோகித் சர்மா 109 போட்டிகளில் 2,773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை