டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்திய கோலி!

Updated: Sat, Jun 19 2021 20:04 IST
Virat Kohli Becomes Most Capped Indian Test Captain
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு இது 61ஆவது டெஸ்ட் ஆட்டம். 

இதன்மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி  பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். 

சர்வதேச அளவில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 109 டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். 100 டெஸ்ட் ஆட்டங்களுக்கும் மேல் அணியை வழிநடத்தியுள்ள ஒரே கேப்டன் கிரேம் ஸ்மித் மட்டுமே. அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் 93 டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை