கோலிக்கு சூட்டப்பட்ட மற்றொரு மகுடம்- இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோவர்ஸை கொண்ட முதல் இந்தியார்!

Updated: Mon, Mar 08 2021 14:50 IST
Virat Kohli
Image Source: Google

இந்திய அளவிலும், உலக அளவிலும் இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோவர்ஸைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகின் மிக பிரபல கிரிக்கெட் வீரராகவும் திகழ்பவர் விராட் கோலி. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்தும், பல சாதனைகளை முறியடித்தும் வருகிறார். 

இந்நிலையில் கிரிக்கெட்டைத் தாண்டி விராட் கோலி உலக அளவில் மற்றொரு சாதனையையும் படைதுள்ளார். அவரது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோவர்ஸை நேற்று விராட் கோலி பெற்றுள்ளார். 

இதன் மூலம் உலகில் 10 கோடி இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸைக் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர், மற்றும் இந்திய அளவில் 10 கோடி ஃபாலோவர்ஸைக் பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 

உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட நபராக போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். ரொனால்டோவுக்கு 26.60 கோடி பாலோவர்ஸ் உள்ளனர். அதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற பாடகர் அரியானா கிராண்டேனை 22.40 கோடி பேரும், பொழுது போக்கு மல்யுத்த வீரர் ‘தி ராக்’ ஜான்ஸனை 22 கோடி பேரும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை