ஆர்சிபியிலிருந்து விலக நினைத்தேன் - விராட் கோலி!

Updated: Sat, Feb 26 2022 19:53 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. "ஈ சாலா கப் நம்தே" என்ற வாசகமும் பல்வேறு அணி ரசிகர்களாலும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதன் விளைவாக தான் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது அணி மாறவில்லை. தனது கடைசி போட்டி வரை ஆர்சிபியில் தான் இருப்பேன் எனத் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கோலியும் ஏலத்தில் பங்கேற்க முடிவெடுத்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், “உண்மையை கூற வேண்டும் என்றால், ஆர்சிபியில் இருந்து விலக நான் யோசித்திருந்துள்ளேன். பலரும் என்னை அனுகினர். ஏலத்தில் வாருங்கள், நாங்கள் எப்படியாவது ஏலம் எடுக்கிறோம் என்றும் கூறினர். ஆனால் பின்னர் என் மனம் அதனை ஏற்கவில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.

பல சிறந்த வீரர்கள் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். ஆனால் அதை வைத்து அவர்களை யாரும் நினைவுக்கூறவில்லை. எனவே என்னைப் பொறுத்தவரை ஒரு அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு ஆரம்ப காலத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தது. என் மீது நம்பிக்கை வைத்தது. இதனை நான் மறக்க மாட்டேன்.

என்னால் வேறு ஒரு அணியில் விளையாடுவது போன்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பெங்களூரு நகரம் ஒரு புதுவித உணர்வை கொடுக்கும். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் செல்லும் வரை வழியில் ரசிகர்கள் காட்டும் அன்பு, இது நமது வீடு என்பது போன்ற உணர்வையே கொடுக்கும். இதனை விட்டு என்றும் செல்ல மாட்டேன்” என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை