டி20 உலகக்கோப்பை குறித்து தனது கருத்து தெரிவித்த ராஸ் டெய்லர்!

Updated: Sat, Oct 01 2022 16:45 IST
Virat Kohli Peaking At Right Time Ahead Of World Cup says Ross Taylor
Image Source: Google

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ராஸ் டெய்லர் சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வினை அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜென்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும், விராட் கோலி குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 

இது குறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும்போது விராட் கோலியுடன் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன். அவருடன் இருந்த அனுபவங்களை மிகவும் ரசித்தேன். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். அவரது இந்த ஆட்டம் இந்திய அணிக்கு நிச்சயம் பலத்தை சேர்க்கும்.

இனிவரும் ஆண்டுகளிலும் அவர் நிறைய சதங்களை அடிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். எதிர்வரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இன்னும் பல திறமையான வீரர்களின் பெயர்கள் வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன். கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பதும், அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருப்பதும் இந்திய அணிக்கு சாதகமான ஒன்று.

எனவே இந்திய அணி கோப்பையை வெல்லவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சொந்த மண்ணில் சமீபகாலமாகவே இந்திய அணி விளையாடிய விதம் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஆனால் அதே வேளையில் நடப்பு சாம்பியனாக இந்த டி20 உலககோப்பை தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணியானது சொந்த நாட்டிலேயே இந்த தொடரை அணுக உள்ளதால் அவர்களே சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 

அதோடு ஆஸ்திரேலிய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருப்பதாலும், பேட்டிங் மற்றும் பவுலிங் என சரியான கலவையில் பலமான வீரர்கள் இருப்பதனாலும் அவர்களுக்கு சாம்பியன் பட்டம் வெல்ல அதிகவாய்ப்புள்ளது. அவர்களை தவிர்த்து நியூசிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த சில ஐசிசி தொடர்களாகவே அவர்கள் முதல் நான்கு இடத்திற்குள் வந்துள்ளனர். எனவே இம்முறையும் அவர்கள் நிச்சயம் முதல் நான்கு இடத்திற்குள் வருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை