இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Mon, May 22 2023 11:50 IST
Virat Kohli played brilliantly to give us a chance, says RCB captain Faf du Plessis after loss vs GT (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில்  விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெசிஸ், “இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. நாங்கள் ஒரு பலமான அணியாகவே இந்த போட்டியில் விளையாடினோம். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து சுப்மன் கில் வெற்றியை பறித்து விட்டார்.

முதல் இன்னிங்சில் நாங்கள் விளையாடிய போது விராட் கோலி நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கினார். இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி அனைத்தையும் மாற்றிவிட்டார். இந்த தொடர் முழுவதுமே எங்களுடைய டாப் ஆர்டரில் முதல் நான்கு வீரர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

எங்களது லோயர் மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனிடம் இருந்தும் தொடர்ச்சியான பங்களிப்பு கிடைக்கவில்லை. இந்த தொடர் முழுவதுமே எங்களது மிடில் ஆர்டரில் பெரிய அளவில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததால் நாங்கள் சரிவை சந்தித்தோம். இன்னும் எங்களது அணியில் பின்வரிசையில் பினிஷிங் செய்யும் வீரர்களை பலப்படுத்த வேண்டும்” என தெவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை