கோலியின் பேட்டிங் குறித்து அறிவுரை வழங்கிய பிரையன் லாரா!

Updated: Sun, Apr 24 2022 22:42 IST
Image Source: Google

கேப்டன் பதவியால் தமது பேட்டிங் பாதிக்கப்படுவதாக கூறி, அனைத்து விதமான போட்டியிலிருந்தும் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்தார். எந்த அழுத்தமும் இல்லாததால் விராட் கோலி இம்முறை ஐபிஎல் தொடரில் பட்டாசு போல் தெறிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் விராட் கோலி இருந்த ஃபார்மில் இருந்து மோசமாக ஆகிவிட்டது. பேட்டிங்கில் சுத்தமாக ரன் எடுப்பதில்லை. ஒரு காலத்தில் ஒரே சீசனில் 4 சதம் விளாசிய விராட் கோலி, நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 8 போட்டியில் மொத்தமே அவர் அடித்த ரன்கள் 119. இதில் அதிகபட்ச ஸ்கோர் 48 ரன்கள்.

இதில் மிகவும் கோலி ரசிகர்களின் மனதை பாதிக்கப்படும் விசயம் எனன தெரியுமா? தொடர்ந்து 2 இன்னிங்சில் கோல்டன் டக்காகி வெளியேறியது தான். இதனால் கோலி, கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்து கொண்டு மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா, விராட் கோலியை அழைத்து பேசினார். அப்போது விராட் கோலி ஷாட் தேர்வில், அவர் ஆடும் முறையில் இருக்கும் தவறை பிரைன் லாரா சுட்டிக்காட்டினார். அதனை விராட் கோலியும் ஒரு மாணவனை போல் உற்று நோக்கி கேட்டார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகிறது, இதனிடையே விராட் கோலி ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேவின் பிட்டர்சன், “விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள், பலமுறை இது போன்ற கட்டத்தை சந்தித்துள்ளதாகவும், அதே போன்று பல வீரர்களும் மீண்டும் ரன் குவிக்க செய்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால் விராட் கோலி பழைய படி மீண்டும் திரும்புவார்” என நம்பிக்கை தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை