SA vs IND: ஒருநாள் தொடரிலிருந்து விலகும் கோலி!

Updated: Tue, Dec 14 2021 12:19 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17ஆம் தேதி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதை பிசிசிஐ நேற்று முறைப்படி அறிவித்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி, அனுஷ்கா தம்பதியின் மகள் வாமிகா முதலாவது பிறந்த நாள் 2022, ஜனவரி 9ஆம் தேதி வருகிறது. தன்னுடைய மகளின் முதல் பிறந்த நாளில் குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதால், ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு அளிக்கும்படி பிசிசிஐயிடம் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “விராட் கோலி தன்னுடைய மகளின் பிறந்த நாள் 2022 ஜனவரி மாதம் வருவதால், அந்த நேரத்தில் குடும்பத்தாருடன் செலவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு அளிக்கும்படி வாரியத்திடம் கோலி கேட்டுக் கொண்டிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை