கோலியின் கேப்டன்சியில் நான் விளையாடியிருந்தால் இது நிச்சயம் நடந்திருக்கும் - ஸ்ரீசாந்த்!

Updated: Tue, Jul 19 2022 16:55 IST
Image Source: Google

இந்திய அணியில் 2005ஆம் ஆண்டு அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 2011ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக விளையாடினார். மிரட்டலான வேகப்பந்துவீச்சாளராக  திகழ்ந்த ஸ்ரீசாந்த், இந்தியாவிற்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 87, 75 மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பைகளையும் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வெகுசில வீரர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர். 

தனது அதிவேகமான பந்துவீச்சாளும், துல்லியமான யார்க்கர்களாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டவர் ஸ்ரீசாந்த். ஆனால் கடந்த 2013 ஐபிஎல்லில் சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்ற அவரது கெரியர், அத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன்சியில் தான் விளையாடியிருந்தால் இந்திய அணி 3 உலக கோப்பைகளை ஜெயித்திருக்கும் என்று ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், “நான் மட்டும் விராட் கோலியின் கேப்டன்சியில் ஆடியிருந்தால், இந்திய அணி 2015 (ஒருநாள் உலக கோப்பை), 2019(ஒருநாள் உலக கோப்பை), 2021 (டி20 உலக கோப்பை) ஆகிய  3 ஆண்டுகளிலும் 3 உலக கோப்பைகளை வென்றிருக்கும்” என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை