விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக உள்ளது - ரிக்கி பாண்டிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்குப்பின் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என இழந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியது தனக்கு ஆச்சரியமாக உள்ளதென ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டி கேப்டன்ஷிப்பிலிருந்து விராட் கோலி விலகியது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏனேனில் ஐபிஎல் 2021-ன் முதல் பாகத்தின் போது நானும் விராட் கோலியும் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது அவர் ஒயிட் பால் கிரிக்கெட்டிலிருந்து விலகுவது குறித்தும், டெஸ்ட் கேப்டனாக தொடர்வதில் எவ்வளவு ஆர்வாமாக இருந்தார் என்பதும் குறித்தும் பேசினார்.
அந்த வேலையையும் அந்த பதவியையும் அவர் மிகவும் விரும்பி நேசித்தார். வெளிப்படையாக, இந்திய டெஸ்ட் அணி அவரது தலைமையில் நிறைய சாதித்தது. அதைக் கேட்டதும், நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். அவர் பேசியதுமே இந்திய கிரிக்கெட்டுக்கு எந்தளவு சிறந்து விளங்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பது எனக்கு புரிந்தது.
ஆனால் தற்போது அவரது முடிவைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் நான் மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். நான் கேப்டனாக இருக்க வேண்டியதை விட இரண்டு வருடங்கள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.