ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!

Updated: Sun, Mar 31 2024 15:55 IST
ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்துள்ளார். 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணியும், ஒருநாள் தொடரை வங்கதேச அணியும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இத்தொடருக்கான இலங்கை அணியில் வநிந்து ஹசரங்காவும் சேர்க்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் தான் அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் ரூ.1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ஒப்பந்தம் செய்தது. தற்போது ஹசரங்கா தொடரிலிருந்து விலகியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்யும் முயற்சியிலும் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளாது. 

 

மேலும் வநிந்து ஹசரங்காவின் இந்த முடிவு குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா, “ஹசரங்கா தனது காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவரைச் சந்தித்த பிறகு தனது காயத்திலிருந்து மீள முடிவு செய்ய வேண்டியிருப்பதால் அவர் ஐபிஎல்லில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே அவர் தனது குதிகாலில் வீக்கம் ஏற்பட்டு, ஊசி போட்டு விளையாடியுள்ளார். எனவே உலகக் கோப்பைக்கு முன்னதாகவே இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடிவு செய்த அவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரைத் தவிர்க்கும் முடிவை எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஐடன் மார்க்ரம் அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர யாதவ், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, டிராவிஸ் ஹெட், ஜெய்தேவ் உனட்கட், ஆகாஷ் மஹராஜ் சிங், ஜாதவேத் சுப்ரமணியம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை