இந்திய தொடர் முடிந்ததும் ஐபிஎல் தொடருக்கான அழைப்பு கிடைத்தது - வானிந்து ஹசரங்கா!

Updated: Tue, Aug 10 2021 11:49 IST
Image Source: Google

இலங்கை அணியை சேர்ந்த 24 வயதான சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள், 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படும் ஹசரங்கா தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

ஐசிசி டி20 கிரிக்கெட் பவுலர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹசரங்கா இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இவரே திகழ்ந்தார். 

இந்நிலையில் லசித் மலிங்கா உடன் நடைபெற்ற ஒரு யூடியூப் உரையாடலின் போது ஹசரங்கா இந்த இந்திய தொடர் முடிந்ததும் 2 ஐபிஎல் அணிகள் தன்னை அணியில் இணைப்பதற்காக அணுகினர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இந்திய தொடர் முடிந்ததும் நிச்சயம் ஐபிஎல் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே என்னை இரண்டு ஐ.பி.எல் அணிகள் அணுகின. மேலும் விரைவில் நிச்சயம் நான் ஐபிஎல் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது மிகப்பெரிய தொகைக்கு நான் ஏலம் போவேன் என தெரிவித்துள்ளார். 

ஆனால் அவரை அணுகிய இரண்டு ஐபிஎல் அணிகள் யாதென்பது குறித்து அவர் பகிரவில்லை.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை