IND vs AUS: இந்தியா உண்மையிலேயே ரிஷப் பந்தை மிஸ் செய்யப் போகிறது - ரவி சாஸ்திரி!
டெஸ்ட் தொடர்களை பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் . அந்த வகையில் இருக்கின்ற மற்றொரு தொடர்தான் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்று அழைக்கப்படும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் .
தற்போது ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வருகின்ற 9ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது . இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் இருக்கின்றனர் .
இந்திய அணியை பொறுத்தவரை இந்தத் தொடரில் அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது டெஸ்ட் போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்த ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஆகும் . கடந்த வருடம் முதலாக மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை இவர்கள் இருவரும் அளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இவர்கள் விட்டுச் சென்றுள்ள இடத்தை நிரப்புவதற்கு பொருத்தமான வீரர்கள் யார் என்று கிரிக்கெட் விமர்சகர்களிடம் கேள்வி எழுந்திருக்கிறது .
பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் பிரபல வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா உண்மையிலேயே ரிசப் பந்தை மிஸ் செய்யப் போகிறது. அவர் விளையாடாதது குறித்து ஆஸ்திரேலியா அணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஒரு ஆட்டத்தின் போக்கை தன் உடைய பேட்டிங்கின் மூலம் அதன் தலையெழுத்தையே மாற்றக்கூடிய திறமையுள்ள வீரர் ரிஷப் பந்த்.
இந்த டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவிருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நினைப்பதாக கூறினார். சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு வீரர் எல்லா நேரங்களிலும் ரன் அடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் . மேலும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் இது போன்ற ஆட்டம் தான் நாதன் லியான் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கை கொடுக்கும். மேலும் சூரியகுமார் யாதவ் மும்பை அணிக்காக ஆடிய மூன்று ரஞ்சிப் போட்டிகளில் 95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடியதையும் நினைவு கூர்ந்தார்.
ஷுப்மன் கில் போன்ற வீரர்களையும் நாம் மறக்கக்கூடாது. நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அணியின் முதல் தரத் தேர்வாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் . மேலும் அவர் குறைந்தபட்ச அணியின் 12 பேர் கொண்ட பட்டியலில் ஆவது இடம் பெற வேண்டும் எனக் கூறினார் . மேலும் தெரிவிக்கையில் சுழலும் ஆடுகளாக இருந்தால் அங்கு எடுக்கப்படும் 40 ரன்கள் கூட போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இதனால் என்னுடைய தேர்வு சூரியகுமார் யாதவாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.