டி20 உலகக்கோப்பை: ஆஸியின் மாற்று கீப்பர் யார் என்பதை தெரிவித்த ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Fri, Oct 21 2022 22:18 IST
Warner being prepared for keeping duties if Wade gets injured (Image Source: Google)

உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஸ் காயம் அடைந்தார். அவருக்கு மாற்றாக ஆல்-ரவுண்டரான கேமரூன் கிரீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதையடுத்து, ஆஸ்திரேலிய அணி மாற்று விக்கெட் கீப்பர் இல்லாமல் பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாக சொல்லப்பட்டது.

அந்த அணியின் பிரதான விக்கெட் கீப்பரான மேத்யூ வேட், விளையாடாத பட்சத்தில் அவருக்கு மாற்றாக யார் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார்கள் என்பதை ஃபின்ச் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஃபிஞ்ச், “அது டேவிட் வார்னராக இருக்கலாம். அவர் நேற்று பயிற்சி மேற்கொண்டிருந்தார். அது நானாக கூட இருக்கலாம். ஆனால், இதற்கு முன்னர் கேப்டன்சி மற்றும் விக்கெட் கீப்பிங் பணியை நான் ஒரே நேரத்தில் கவனித்தது இல்லை. அதனால் அது சவாலாக இருக்கும். 

மிட்செல் ஸ்டார்க் கூட தொடக்கத்தில் சில ஓவர்களை வீசிவிட்டு இடையில் கிளவுஸ் அணிந்து விக்கெட் கீப்பிங் பணியை கவனிக்கலாம். இப்போதைக்கு இது நாங்கள் எடுத்துள்ள ரிஸ்க்தான். அதை நாங்கள் அறிவோம். ஆனால், கேமரூன் கிரீனின் வரவு அணிக்கு நல்ல பேலன்ஸை கொடுத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

நாளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை