சிஎஸ்கே ஜெர்சியில் வார்னர்; ஷாக்கான ரசிகர்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர், இரு ஆட்டங்களில் மொத்தமாக 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் கடைசி 5 ஆட்டங்களில் அவர் சேர்க்கப்படவில்லை. மேலும் போட்டியின் பாதியில் அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்பட்டு கேன் வில்லியம்சனிடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியை விட்டு வார்னர் விலகுகிறார் எனத் தகவல்கள் வெளியாகின. 2016ஆம் ஆண்டு வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
என்னை அணியிலிருந்து நீக்கியதற்கான காரணம் எனக்குத் தெரியாது. கடைசியில் நான் விளையாடவில்லை என்பதுதான் தெரிவிக்கப்பட்டது. கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதற்கான காரணத்தை என்னிடம் விளக்கவில்லை. இது ஏமாற்றமளித்தது. சன்ரைசர்ஸ் அணிக்காக நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் இதன் முடிவு அணியின் உரிமையாளர்களிடம் உள்ளது. ஆனால் வெளிப்படும் அறிகுறிகளைக் கொண்டு அணியில் என்னைத் தக்கவைத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. 2022 ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவேன். அணிக்குத் தலைமை தாங்கவும் நான் தயார் என்று சமீபத்தில் வேதனையுடன் பேட்டியளித்தார் வார்னர்.
இந்நிலையில் சிஎஸ்கே சீருடையுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு வார்னர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அந்தப் படத்தில் வார்னரின் மகளும் சிஎஸ்கே உடையை அணிந்திருந்தார்.
இதுபற்றி வார்னர் கூறுகையில், “இன்று யார் ஜெயிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதை வெளியிடச் சொன்ன ரசிகருக்கு என்னால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்று கூறினார்.
Also Read: T20 World Cup 2021
எனினும் பிறகு அந்தப் படத்தை வார்னர் நீக்கிவிட்டு, சன்ரைசர்ஸ் சீருடையுன் உள்ள அசல் புகைப்படத்தை வெளியிட்டார். இதுதான் அசல் படம் என்று தெரிவித்தார். இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.