ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயம் பங்கேற்பேன் - டேவிட் வார்னர்!

Updated: Fri, Oct 29 2021 15:26 IST
Warner Looking To Make A Fresh Start, Says He Will Be Available For IPL Auction Next Year (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக பாதி தொடரின்போது சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் அடுத்த சில போட்டிகளில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்த தொடர் முழுவதுமே 8 போட்டிகளில் விளையாடிய அவர் 190 ரன்களை மட்டுமே குவித்தார். அதிலும் அதிரடிக்கு பெயர் போன வார்னர் 110-க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருந்தது.

8 போட்டிகளில் அவர் சரியாக விளையாடாததால் அவருக்கு மீதமுள்ள போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றே தெரிகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் விளையாடிய நிலையில் அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் 4 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதால் சன்ரைசர்ஸ் அணி வெளிநாட்டு வீரர்களான வில்லியம்சன் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை தக்கவைக்கவே யோசிக்கும்.

இதன் காரணமாக டேவிட் வார்னர் வெளியேற்றப்படுவார். இந்நிலையில் தான் சன்ரைஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். 

இது குறித்து பேசிய அவர், “அடுத்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் மெகா ஏலத்திற்கு நான் என்னுடைய பெயரை பதிவு செய்வேன்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஹைதராபாத் அணி தற்போதைக்கு என்னை தக்கவைக்காது என்று நினைக்கிறேன். எனவே நிச்சயம் நான் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்த்து விளையாட உள்ளேன். மேலும் அடுத்த ஆண்டு எந்த அணி என்னை ஏலத்தில் எடுத்தாலும் அந்த அணிக்காக முழுவீச்சில் விளையாட தயாராக இருப்பேன்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை