இணையத்தில் வைரலாகும் ஜாஃபரின் ட்வீட்!

Updated: Mon, Sep 06 2021 13:06 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 368 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களைச் சேர்த்து, நான்காம் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது. இதனால் இப்போட்டியில் யார் வேற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது. 

இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருவர்த்துவர்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 3 அணி ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரவி சாஸ்திரி, ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அவரது பதிவில்,“ஒரு ரவி அணியுடன் இருக்க முடியாது. ஒரு ரவி அணியுடன் இருக்கிறார், ஆனால் அதில் இல்லை. ஆனால் இன்னும் ஒரு ரவி அணியுடன் இருக்கிறார், இதில் வெற்றி பெற அவரைத் திரும்பப் பெறுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

 

இப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள முதல்  ‘ரவி’ ரவி சாஸ்திரியையும், இரண்டாவது‘ரவி’ ரவீந்திர ஜடேஜாவையும், மூன்றாவது ‘ரவி’ ரவிச்சந்திரன் அஸ்வினையும் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இத்தொடரின் ஒரு போட்டியில் கூட அனுபவ வீரர் ரவிசந்திரன் அஸ்வின் விளையாடவில்லை. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதனால் இந்திய அணி மீதும், அணி நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வாசிம் ஜாஃபரின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை