ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 39 வயதிலும் சாகசம் காட்டும் ஆண்டர்சன்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்னிலும், அதைத்தொடர்ந்து விலையாடியாடி ஆஸ்திரேலிய அணி 267 ரன்னிலும் ஆல் அவுட்டானது.
அதன்பின் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அந்தரத்தில் தாவி பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது மார்க் வுட் வீசிய பந்தை பாட் கம்மின்ஸ் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அப்போது மிட் ஆன் திசையில் நின்றிருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் லவகமாக அந்தரத்தில் தாவி கேச்ட் பிடித்து அசத்தினார்.
தற்போது 39 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிட்டத்திட்ட இந்த இன்னிங்ஸில் 20 ஓவர்கள் வீசிய பிறகு இப்படி ஒரு அசத்தலான கேட்ச்சை பிடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர்க் கேட்ச் பிடித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.