அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த அமீர் ஜமால் - வைரல் காணொளி!

Updated: Tue, Oct 08 2024 20:51 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சௌத் சகீல் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலிவுடன் இணைந்து கேப்டன் ஒல்லி போப் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இப்போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார். இதன்மூலம் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஒல்லி போப், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்த நிலையில், அப்போது மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அமீர் ஜமால் தாவி அபாரமான கேட்ச்சை எடுத்தார். இதனால் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை