ரீஸ் டாப்லி பந்துவீச்சை பொளந்து கட்டிய அப்துல் சமத் - காணொளி!

Updated: Tue, Apr 16 2024 15:08 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களையும் குவித்தனர்.

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல் சமத்தும் 10 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்களைக் குவித்ததுடன், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களைக் குவித்த அணி எனும் தங்களுடைய முந்தைய சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை படைத்தது.

அதன்பின் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் டூ பிளெசிஸ் 62 ரன்களும், கோலி 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ், ராஜத் பட்டிதார், சௌரவ் சௌகான் போன்ற  வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் ஆரிச்பி அணி 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் யாருமே எதிர்பாராத வகையிலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். .இப்போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்காவிட்டாலும், போட்டியின் 19ஆவது ஓவர் வரை ஆர்சிபி அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிய அவர் 35 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் ஆர்சிபி அணி 262 ரன்களை மட்டுமே சேர்த்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

 

இந்நிலையில் இப்போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அப்துல் சமத் பேட்டிங் செய்த போது, ரீஸ் டாப்லி பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி அந்த ஒரே ஓவரில் 24 ரன்களைக் குவித்தார். அதன்படி இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை ஆர்சிபி அணி வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி வீசினார். அதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அப்துல் சமத் எதிர்கொண்டார்.

அதன்படி அந்த ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் பவுண்டரிகளை விளாசிய அப்துல் சமத் அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். அதன்பின் அந்த ஓவரின் கடைசி பந்தையும் பவுண்டரிக்கு அணுப்பியதோடு, மொத்தமாக 24 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் இளம் வீரரான அப்துல் சமத் ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்த காணொளி வைரலானதுடன், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை