106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் 42 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 34 ரன்களையும் சேர்த்து அசத்தினர். ஹைதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதுடன் 141 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனமூலம் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் அபாரமாக விளையாடி சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த இன்னிங்ஸில் அவர் 14 பவுண்டரிகளையும், 10 சிக்ஸர்களையும் விளாசி இருந்தார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த ஒரு சிக்ஸர் ஒன்று 106 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக தூரத்திற்கு சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையையும் அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
அதன்படி பஞ்சாப் அணி தரப்பில் இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை மார்கோ ஜான்சென் வீசிய நிலையில் ஓவரின் இரண்டாவது பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய நிலையில், அதனை சரியாக கணித்த அபிஷேக் சர்மா நகர்ந்து சென்று ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் மிட் விக்கெட்டிற்கு மேல் சிக்ஸைரை பறக்கவிட்டார். அந்த சிக்ஸரானது 106 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஐபிஎல் 2025 இல் மிக நீண்ட தூர சிக்ஸர்கள்
- 106M-அபிஷேக் சர்மா*
- 105M – டிராவிஸ் ஹெட்
- 105M – பில் சால்ட்
- 102M - அனிகேத் வர்மா
- 98M – டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
- 97M – நிக்கோலஸ் பூரன்