கிளென் பிலிப்ஸுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கேட்ச் பிடித்த ஆண்டர்சன் பிலிப் - காணொளி
Anderson Phillip Catch to dismiss Travis Head: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்டர்சன் பிலிப் அசாத்தியமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிராண்டன் கிங் 8 ரன்களுடனும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தங்களின் அபாரமான ஃபீல்டிங்கின் காரணமாக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதிலும் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சப்டிடியூட் வீரராக ஃபீல்டிங் செய்த ஆண்டர்சன் பிலிப் பிடித்த கேட்ச்சானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 65ஆவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் வீசிய நிலையில், அந்த ஓவரை டிராவிஸ் ஹெட் எதிர்கொண்டார்.
அப்போது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் அதனை கவர் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அப்போது மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஆண்டர்சன் பிலிப் சூப்பர் மேன் போல் பாய்ந்து ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் டிராவிஸ் ஹெட் 20 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: மிக்கைல் லூயிஸ், ஜான் கேம்பல், கெவ்லான் ஆண்டர்சன், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோமல் வாரிக்கன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட்