கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய வங்கதேச வீரர்கள்; வைரலாகும் காணொளி!

Updated: Sun, Mar 31 2024 18:08 IST
கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய வங்கதேச வீரர்கள்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமால் 34 ரன்களுடனும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா 15 ரன்களுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 59 ரன்களில் சண்டிமாலும், 70 ரன்களில் தனஞ்செயாவும் விக்கெட்டை இழந்தர்.

அதன்பின் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 92 ரன்களைச் சேர்த்த நிலயில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 531 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் இப்போட்டியில் இலங்கை அணி வலிமையான முன்னிலையைப் பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணி வீரர்கள் பிரபாத் ஜெயசூர்யாவின் கேட்சை தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. அதன்படி கலெத் அஹ்மத் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா பந்தை தடுக்க முயல, அது பேட்டில் எட்ஜ் எடுத்து நேரடியாக ஸ்லிப்பில் நின்ற கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவிடம் சென்றது. அதனை கணிக்கத் தவறிய அவர் பந்தை தவறவிட்டார். 

 

இதனை சூதாரித்த அருகிலிருந்த இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற வீரரும் பந்தை தாவிப்பிடிக்க முயன்று பந்தை தட்டிவிட, மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த வீரராலும் பந்தை பிடிக்க முடியாமல் அந்த கேட்சை தவறவிட்டனர். ஏற்கெனவே நடப்பு தொடரில் வங்கதேச அணியின் ஃபீல்டிங் கேள்வி குறியாக உள்ள நிலையில் தற்போது கைக்கு வந்த கேட்சையும் தவறவிட்டது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் வங்கதேச வீரர்கள் கேட்சை தவறவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை