எதிரணி ரசிகர்களையும் தனது அபார பீல்டிங்கால் கவர்ந்த மெக்கர்தி - காணொளி!

Updated: Mon, Oct 31 2022 20:23 IST
Watch Barry Mccarthy Brilliant Fielding Effort Aus Vs Ire T20 World Cup 2022 (Image Source: Google)

பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபின்ச் பொறுப்புடன் நிலைத்து ஆட, மிட்செல் மார்ஷ் 22 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஆரோன் ஃபின்ச், ௪௪ பந்தில் 63 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்தில் 35 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 10 பந்தில் 15 ரன்களும், மேத்யூ வேட் 3 பந்தில் 7 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை தொடர்ந்து பறிகொடுத்தனர். தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் (11 ரன்கள்), கேப்டன் பால்பிர்னி (6 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தாலும் லோர்க்கன் டக்கர் மட்டும் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த அணியின் நடுவரிசை வீரர் டெக்டர் 6 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கேம்பர் மற்றும் டாக்ரேல், ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினர். சிறப்பாக ஆடிய லோர்க்கன் டக்கர் அரைசதம் கடந்தார். இருப்பினும் இவரின் அதிரடி அயர்லாந்து அணியின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

இறுதியில் அயர்லாந்து 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. லோர்க்கன் டக்கர் 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த அணி குரூப் ஏ புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில், இப்போட்டியின் 14.2ஆவது ஓவரில் ஸ்டாய்னிஸ் தூக்கியடித்த பந்து, வானத்தை தொடும் அளவுக்கு மிகவும் உயரமாக சென்று, லாங் ஆன் திசையில் பவுண்டரிக்குள் செல்ல முயற்சித்தது. இதனை பார்த்த, பீல்டர் மெகர்த்தி மேலே பறந்து, பந்தை ஒத்த கையில் கேட்ச் பிடித்து, உள்ளே எறிந்துவிட்டு, சிக்ஸர் லைனக்குள் விழுந்துவிட்டார். இது அனைத்தும் ஒரே நொடியில் நடந்தது. இதனைப் பார்த்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று கை கைதட்டினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை